‘யங் மங் சங்’கிற்கும் பிரபுதேவாவுக்கும் என்ன சம்பந்தம்..!

Prabhudeva

‘தேவி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபுதேவா மீண்டும் தனது நடிப்பு பயணத்தில் பிஸியாகி விட்டார்.. அடுத்ததாக அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பெயர் ‘யங் மங் சங்’.. கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா.. மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை தான் ‘யங் மங் சங்’. அதைவைத்து காமெடி களத்தில் கதை பின்னப்பட்டுள்ளதாம்.

இந்தப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார் கேத்தரின் தெரசா. முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜூன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப்படம் உருவாக இருக்கிறதாம்.