வாழ்த்தினார் ‘கபாலி’..! மகிழ்ச்சியில் மணமக்கள்..!!

சாந்தனு – கீர்த்தி திருமண வரவேற்பு இன்று மாலை சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. திருமண வைபவத்தில் கலந்துகொள்ளாத பிரபலங்கள் பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.. குறிப்பாக திருமணத்தன்றே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூப்பர்ஸ்டார், இன்று வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சந்தோஷ ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

தனுஷ் சார்பாக அவரது மனைவி ஐஸ்வர்யா, தனது தந்தையுடன் வந்திருந்தார். இன்னொரு சர்ப்ரைஸாக கேப்டன் விஜயகாந்த் தனது மனைவி மற்றும் மைத்துனருடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார். மேலும் சத்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், நடிகர் சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்த திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.