“அர்ஜுனிடம் கற்றுக்கொண்டது என்ன.?” – கொலைகாரன் விஜய் ஆண்டனி ஆச்சர்யம்..!

விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘கொலைகாரன்’. வழக்கம்போல இதுவும் ஒரு எதிர்மறையான டைட்டில் தான். இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

ஆண்ட்ரூ லூயிஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் லயோலா கல்லூரியில் விஜய் ஆண்டனியுடன் படித்த நண்பர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்காமல் சைமன் கே கிங் என்பவரை சேமிக்க வைத்துள்ளார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இந்த சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி, நான் இதுவரை தயாரித்து நடித்த படங்களில் நடிக்கும் போது சிறிய அளவில் தெரிந்தது.. ஆனால் தற்போது வெளிப்படங்களில் நடிக்கும்போது ஒவ்வொரு படமும் பிரம்மாண்டமாக என்னை மிரட்டுகிறது. அதிலும் இந்த படத்தில் அர்ஜுன் சார் உள்ளே நுழைந்தவுடன் படத்தின் கலரே வேறு மாதிரி மாறிவிட்டது.

இந்த படத்தில் அவர் நடிக்கும் போது அவரது உதடுகள் அசைவது, கண்கள் அசைவது, வசனமே பேசாமல் மௌனமாக நடிப்பை வெளிபடுத்துவது என அவரது ஒவ்வொரு அசைவையும் பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன் என சொல்ல மாட்டேன்.. நிறைய கவனித்து மகிழ்ந்தேன். இந்தப்படத்திற்கு அவர் மிகப்பெரிய தூண் என்று சொல்லலாம்.. இந்த படத்தை தனஞ்செயன் ரிலீஸ் செய்வது எங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது” என்றார்

இந்த நிகழ்வில் இயக்குனர்கள் சசி, வசந்தபாலன், புஷ்கர்-காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வரும் மே மாதம் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.