‘கட்டிங்’ நாளை..! ‘ஃபுல்’ ஆகஸ்ட்-14ல்…! சரக்கை ரிலீஸ் பண்ணும் ஆர்யா

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ (வி.எஸ்.ஓ.பி) படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆர்யாவே தயாரித்துள இந்தப்படம் அவரது 25வது படம் என்பது ஹைலைட். முதல் கட்டமாக நாளை மாலை 6 மணிக்கு வி.எஸ்.ஓ.பியில் இருந்து ஒரு ‘கட்டிங்’ டீசரை வெளியிடுகிறார் ஆர்யா. வரும் ஜூலை-18ல் ஆடியோ ரிலீசை நடத்துகிறார்..

வரும் ஆகஸ்ட்-14ல் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. தமன்னா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் சந்தானம்-கருணாகரன் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்களுக்கு நான்ஸ்டாப் காமெடி ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.