‘ராட்சச’ போலீஸ் ஆக விஷ்ணு விஷாலின் அதிரடி..!

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் யதார்த்தமாக தன்னை நுழைத்துக்கொள்பவர் விஷ்ணு விஷால்… இத்ப்போது தான் சரியான நேரம் என நினைத்ததோ என்னவோ, முதன்முறையாக போலீஸ் அதிகாரி கேரக்டர் அவரை தேடி வந்துள்ளது.. படத்தின் பெயர் ராட்சசன்.. கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார். க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தை ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் இயக்குகிறார்..

போலீஸ் ஆகும் ஆசிஎல்லாம் விஷ்ணுவுக்கு இல்லை.. அவரது எண்ணமெல்லாம் சினிமாவில் இயக்குனர் ஆவதுதான். அப்படி உதவி இயக்குனராக வேலை பார்க்கும் விஷ்ணுவை காலம் போலீஸ் அதிகாரியாக யூனிபார்ம் மாட்டி அழகு பார்க்கிறது.. போலீசாக அவர் சந்திக்கும் சவால்களை கணக்கில் கொண்டே படத்தில் அவரது கேரக்டரை ‘ராட்சசன்’ என்றே வைத்துள்ளார்கள்.