கேப்டன்ஷிப்புக்கு விஷால் தான் சரியான ஆள்..!

 

இந்த வருட நட்சத்திர கிரிக்கெட் கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கிவிட்டது. இந்த வருடத்திற்கான சென்னை ரைனோஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விஷால் கேப்டன் பதவியிலிருந்து விலகவே, இந்தமுறை ஜீவா கேப்டனாகி இருக்கிறார்.

நேற்று இந்த அணியின் உரிமையாளர் கங்கா பிரசாத் முன்னிலையில் வீரர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த அணியில் விஷ்ணு, விக்ராந்த், ரமணா என முன்னணி வீரர்களுடன் ஆர்யா, சாந்தனு, பிருத்வி, போஸ்வெங்கட் என பலர் இதில் இருக்கின்றனர்.

இந்த அறிமுக விழாவில் பேசிய கேப்டன் ஜீவா, “கேப்டன்ஷிப்புக்கு விஷால் தான் சரியான ஆள்.. அவரது வேலைப்பளு காரணமாக கேப்டன்ஷிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கிறாரே தவிர, போட்டிகளில் அவர் கலந்துகொள்ளத்தான் இருக்கிறார். ஜெயிப்போம் என்று உறுதியாக சொல்லமாட்டேன். ஆனால் நிச்சயம் டீசன்டான ஆட்டத்தை தருவோம்” என கூறினார்.