நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் அல்ல ; விஷால்

vishal (3)

சண்டக்கொழில்-2 படம் வரும் அக்-18ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.. இந்த நிகழ்வின் இறுதியில் விஹாளிடம் கேள்வி கேட்ட நிருபர்கள், கடந்த சில நாட்களாக புகைந்து வரும் சின்மயி-வைரமுத்து, மீ டூ விவகாரத்தில் நடிகர்சங்கத்தின் நிலைப்பாடு என்ன, விஷாலின் நிலை என்ன என்பது குறித்து கேள்விகளை எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த விஷால், “இதுபோன்ற விஷயங்களை அப்படி நடப்பதற்கு முன்போ, அல்லது நடந்தபின் உடனடியாகவோ எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால் நாங்கள் அதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவ முடியும். உதாரணத்திற்கு நடிகை அமலாபாளுக்கு அப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டபோது, அதை உடனடியாக எண்களின் கவனத்திற்கு கொண்டுவந்து உதவி கேட்டார்.. இனங்களின் வழிகாட்டுதலின்படி நடந்து அவருக்கு தொந்தரவளித்த அன்பரை சட்டரீதியாக கைதுசெய்ய வைத்தோம்.

எங்கள் நடிகர் சங்கத்தில் உள்ளவர்களோ, சங்கத்தில் இல்லாதவர்களோ அனைத்து பெண்களுக்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் இருக்கிறோம்.. அதேசமயம் அவர்களும் இதுபோன்ற சிக்கல் ஏற்படும்போது தாமதிக்கமால் எங்களை அணுகவேண்டும்.

வைரமுத்து மீது தொடர்ந்து சிலர் குற்றம் சாட்டுவதால் அவர் மீது தடை விதிப்பீர்களா என்கிற கேள்விக்கு பதிலளித்த விஷால், நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் அல்ல.. அப்படியே குற்றச்சாட்டு இருந்தாலும் கூட அது சட்டப்பூர்வமாக விசாரணைக்கு ஆளாகி நீதிமன்றம் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும்” என்றார்.