விக்ரம் பிரபுவின் தாடி சீக்ரெட் சொல்லும் இயக்குனர்..!

wagah

விக்ரம் பிரபுவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் தான் ‘வாகா’.. காஷ்மீர் ராணுவ பின்னணியில் படமாக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தின் கதையை ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதியுள்ளார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். இந்தப்படத்தில் கதாநாயகியாக ரன்யா நடிக்க, இசையமைத்துள்ளார் டி.இமான்.

இந்தப்படத்தில் ராணுவ வீரரான விக்ரம் பிரபு தாடியுடன் இருப்பதுபோல போஸ்டர்களில் பார்த்த பலருக்கும் ராணுவ வீரர் தாடி வைத்திருக்கலாமா என்கிற சந்தேகம் ஏற்படவே செய்யும். ஆனால் இதற்கு சரியான விளக்கம் வைத்துள்ளார் இயக்குனர் குமரவேலன்.

அதாவது கதைப்படி விக்ரம் பிரபு எல்லைப்பாதுகாப்பு படைவீரராக நடிக்கிறார். ராணுவ வீரர்கள்தான் தாடி வைத்துக்கொள்ள கூடாது.. ஆனால் எல்லை பாதுகாப்பு படை வீரர் தாடி வைத்துக்கொள்ளலாம் என சலுகை உள்ளது என்கிற விஷயத்தை விளக்கியுள்ளார் குமரவேலன்