“விக்ரம் படத்தில் புதுசா என்ன இருக்கு..?” – ஆச்சர்யமூட்டும் விஜய் மில்டன்

கோலிசோடா படத்திற்கு பிறகு விஜய் மில்டன் விக்ரமை வைத்து இயக்கிவரும் படம் ‘10 எண்றதுக்குள்ள’. சமந்தா தான் கதாநாயகி.. அதிலும் இரட்டைவேடம்.. இதுதவிர பசுபதி முக்கியவேடத்தில் நடிக்கிறார். தூள், அருள், மஜா படங்களை தொடர்ந்து விக்ரமுடன் இவருக்கு நான்காவது படம் இது.

படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ், பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது. இதெல்லாமே நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தான்.. படம் ரிலீஸுக்கு தயாராகிவரும் இந்த நேரத்தில், வேறு புது தகவல்கள் என்ன இருக்கிறது என கேட்டால் பட்டியல் போடுகிறார் விஜய் மில்டன்.

சென்னையில் தொடங்கி நேபாள எல்லை வரைக்கும் பயணமாகும் ட்ராவல் சப்ஜெக்ட். கதை ஒவ்வொரு மாநிலத்தை கடந்து செல்லும்போதும் அந்தந்த மாநில நடிகர்கள், வில்லன்கள், காமெடியன்கள் கதையில் இணைந்து கொள்வார்களாம்.

படத்தில் விக்ரம் ஒரு கார் டிரைவராக நடிக்கிறார்.. அதிகவேகமாக கார் ஓட்டக்கூடிய இவர் ஒரு ஆபத்தில் சிக்கிய சமந்தாவை காப்பாற்ற வில்லன்களிடமிருந்து தப்பி ஓடுவதும், ஒரு கட்டத்துக்கு பிறகு வில்லனை திருப்பி துரத்துவதுமான பரபரபான ஆக்சன் கதை தான் இது.

இதில் ஆச்சர்யமான விஷயமாக விக்ரமின் கேரக்டர் பெயர் யாருக்குமே தெரியாது. மை நேம் பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் என்றோ, மை நேம் இஸ் ஹாசன் கமலஹாசன் என்றோ ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயரைச் சொல்வாராம். க்ளைமாக்ஸில் தான் உண்மையான பெயர் என்னவென்று தெரியுமாம்.

படத்தில் பசுவதி, ராகுல்தேவ், அபிமன்யூசிங், ராதாரவி என 4 வில்லன்கள் ஒவ்வொருவரும் தனித்தனி பகுதியில் வந்து கிளைமாக்ஸில் ஒன்றாக சேருவார்களாம். படப்பிடிப்பிற்காக சமந்தாவும், விக்ரமும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் கார் ஓட்டியிருக்கிறார்கள். இந்த காரை ஒரு பிரபல கார் நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது.

ஹீரோயின் சமந்தாவை சுற்றித்தான் கதை நடக்கும். இதில் புதுவிதமான காதல் எபிசோடை புகுத்தியிருக்கிறாராம் விஜய் மில்டன். சமந்தா, விக்ரமை காதலிப்பார். ஆனால் டூயட் கிடையாது. காதலுக்கே உரிய எந்த காட்சியும் இருக்காது. ஆனாலும் காதல் மட்டும் இருக்குமாம்.

ராஜஸ்தான் மாநில புஷ்கர் என்ற இடத்தில் நடக்கும் ஒட்டகச்சந்தை ரொம்பவே பிரபலம் இங்கு விக்ரம் ஒருவரிடம் திருடும் காட்சியை கேண்டிட் கேமரா மூலம் படமாக்கியபோது விக்ரமை நிஜமான திருடன் என்று அங்குள்வர்கள் சூழ்ந்துகொள்ள, அவரை காப்பாற்றி அழைத்து வந்தது போன்ற பல ரிஸ்கான விஷயங்கள் படப்பிடிப்பில் நடந்துள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம் வேகமாக கார் ஓட்டினாலும், அவருக்கு சைக்கிள், பைக் எல்லாம் ஓட்டத் தெரியாதாம் இது படத்தின் பல இடங்களில் காமெடியாகவும், பல இடங்களில் சீரியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது..