சூப்பர்டீலக்ஸ் பர்ஸ்ட்லுக் வெளியீடு..!

super deluxe

ஆரண்யகாண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்.. விஜய்சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, சந்தீப், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படம் ஆந்தாலஜி வகையை சேர்ந்த திரைப்படம் என சொல்லப்படுகிறது.. அதாவது கொஞ்சம் நீளமான இரண்டு குறும்படங்களின் இணைப்பாக இந்தப்படம் உருவாகியுள்ளதாம்.

இதில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சுனில் நிறைவு பெற்ற நிலையில் தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விஜய்சேதுபதியின் லுக்கே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.