சந்திரமௌலி படப்பிடிப்பை நிறைவு செய்தார் வரலட்சுமி..!

chandramouli shooting varalaksmi 1

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் ‘மிஸ்டர்.சந்திரமௌலி’. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது.

இந்தப்படத்தில் வரலட்சுமி தான் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்து நேற்றுடன் நிறைவு செய்தார். இதையடுத்து கார்த்திக், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் திரு உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி வரலட்சுமிக்கு பிரியா விடை கொடுத்தனர்.