இரட்டிப்பு மகிழ்ச்சியில் வரலட்சுமி..!

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகைக்கு திறமை அழகு இரண்டும் இருந்தாலும் அதிர்ஷ்டம் ஒன்று வேண்டும் என்பார்கள். அப்படியே அதிர்ஷ்டம் ஒர்க் அவுட் ஆனாலும் அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்பு வெற்றியாகி அந்த ராசி என்கிற ஒன்று ஒர்க் அவுட் ஆனால் தான் அவாரால் அடுத்தகட்டத்திற்கு நகர முடியும்.

அப்படி ஒரு சென்டிமென்ட் தமிழ்சினிமாவில் இப்போதும் நிலவுகிறது. அழகில் எந்தவித குறையும் சொல்லமுடியாத நடிகை வரலட்சுமி, அறிமுக காலகட்டத்தில் அப்படி ஒரு இக்கட்டான சூழலில் சிக்கினாலும் கூட, பாலாவின் ‘தாரை தப்பட்டை’ மூலம் தான் திறமை வாய்ந்த, மிகச்சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார்.

அதைத்தொடர்ந்து தான் படைப்பாளிகளின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. நல்ல கனமான கேரக்டர்கள் அவரை தேடி வர ஆரம்பித்தன. இதோ இப்போது ஒரே நாளில் ‘விக்ரம் வேதா’ படத்தின் நூறாவது நாள் விழா, மற்றும் சமீபத்தில் வெளியான ‘சத்யா’ படத்தின் வெற்றி விழா என இரண்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டு இரட்டிப்பு சந்தோஷத்தில் திளைத்து வருகிறார் வரலட்சுமி.

ஒரு நல்ல நடிகைக்கு இதைவிட சிறந்த அங்கீகாரம் வேறென்ன இருக்க முடியும்..?