வைரமுத்து – ஜிப்ரான் கூட்டணியில் உருவான ‘கலாம் நினைவாஞ்சலி’ பாடல்..!

kalam anthem 1

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த மாமேதை அப்துல் கலாம் அய்யாவின் இரண்டாம் ஆண்டு நினைவாஞ்சலியை முன்னிட்டு ‘கலாம் ஆந்தம்’ என்ற வீடியோ பாடலை வெளியிடவுள்ளனர். இப்பாடலை ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எழுதியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க திரு.வசந்த் அவர்கள் இந்த வீடியோ ஆல்பத்தை இயக்கியுள்ளார்.

அப்துல் கலாம் என்ற மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தான் இதுவரை எழுதியுள்ள பாடல்களிலேயே இது ஒரு சிறந்த பாடல் எனவும், இந்தியன் அறிய சொத்தாக இருந்த கலாம் ஐயாவுக்காக எழுதும்பொழுகு தான் மிகவும் நெகிழ்ந்து போனதாகவும் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து கூறியுள்ளார்.

கலாம் அய்யாவின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவரின் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜூலை 27 அன்று நடக்கவிருக்கும் இதன் திறப்புவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நினைவு மண்டபத்தை திறந்து வைக்கவுள்ளார். முன்னதாக இந்த வீடியோ ஆல்பத்தை பிரதமர் மோடியிடம் வழங்கி அவரது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் பெற்று வந்துள்ளனர்.