‘வி’ இதழின் குடும்ப நிகழ்வு!!

வியாபாரம், வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு இதழான ‘வி’ (WE MAGAZINE) மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிநடை போட்டு வருவதோடு, அதன் அங்கமான ‘வி டாக்கீஸ்’ (WE TALKIES) யுடியுப் சேனல், 8 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் இயங்கி வருகிறது. பல்வேறு சினிமா சார்ந்த விஷயங்களை உடனுக்கு உடன் கொடுத்து வருவதில் வி சேனலுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

வி இதழின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட அதன் நிறுவனர் சுமதி ஸ்ரீனிவாஸின் மகன் கிரணுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

கீர்த்தனா என்பவரை அவர் மணந்தார். இவர்களின் திருமணத்திற்கு பிந்தைய பிரம்மாண்ட விழா ஒன்றை வி குடும்பம் நடத்தியது.

கொரோனா அச்சமாக நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதில் பிரபலங்கள் சிலர் தயக்கம் காட்டி வரும் தற்போதைய சூழலிலும், வி குடும்ப விழாவான இவ்விழாவில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டு கிரண் – கீர்த்தனா தம்பதியை வாழ்த்திஆசீர்வதித்ததை கண்டு வி குடும்பம் மகிழ்ந்தது.

நிகழ்வில் கலந்துக் கொண்ட விருந்தினர்களுக்கு வசதியாக சுமதி ஸ்ரீனிவாஸ் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்தனர்.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சோபா சந்திரசேகர், நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி நடிகை கிகி, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகைகள் விஜி சந்திரசேகர், நீலிமா, தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், இசையமைப்பாளர் தரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்ட கிரண் – கீர்த்தனா தம்பதியின் திருமணத்திற்கு பிந்தைய இந்த நிகழ்வு, எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு பிரம்மாண்ட நாளாக அமைந்ததுள்ளது.