டிராபிக் ராமசாமி – விமர்சனம்

traffic ramasamy review

சமூக போராளி டிராபிக் ராமசாமியை பற்றி அனைவர்க்கும் தெரியும்.. தற்போது அவர் உயிருடன் தான் இருக்கிறார்.. அப்படிப்பட்டவரின் போராட்ட வரலாறை அவர் வாழும்போதே படமாக எடுத்துள்ளார்கள். நிஜத்தை நிழலில் எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் பார்க்கலாம்.

டிராபிக் ராமசாமி நடத்திய எத்தனையோ போராட்டங்கள், அதற்கான வெற்றிகள் ரசிகர்களுக்கு, மக்களுக்கே தெரியும்.. அதில் மீன்பாடி வண்டி கொலை வழக்கை மட்டும் முழுக்கதையாக சவசவ் என இழுத்திருக்கிறார்கள். டிராபிக் ராமசாமியாக நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகரை தேர்வு செய்ததில் இருந்து முதல் குளறுபடி ஆரம்பிக்கிறது. சேற்றில் தொபுக்கடீர் என விழுவது, தலைகீழாக கட்டி தொங்க விடப்படுவது. குப்புற படுக்கப்போட்டு கும்முவது, என ஆக்சன் காட்சிகளில் இளம் ஹீரோக்களுக்கு இணையாக காட்டிய சிரத்தையை ஆக்டிங்கில் காட்டவில்லை என்பதுதான் சோகமே..

எஸ்.ஏ.சியின் மனைவியாக ரோகிணியும் ஒட்டவில்லை.. அவர்களது குடும்பத்தினரும் மனதில் ஒட்டவில்லை.. விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, குஷ்பூ, எல்லோருமே படத்தின் நட்சத்திர வேல்யூவை அதிகரிக்க உதவி இருக்கிறார்கள்.. அவ்வளவுதான். பிரகாஷ்ராஜ் சற்றே ஆறுதல் தருகிறார்..

ரவுடியாக வரும் ஆர்.கே.சுரேஷ் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். வழக்கமாக எஸ்.ஏ.சியின் படங்களில் காட்டப்படும் நீதிமன்ற மிடுக்கு இதில் மிஸ்ஸிங். அறிமுக இயக்குனர் விக்கி ரொம்பவே விளையாட்டுத்தனமாக இந்தப்படத்தை இயக்கியதாக அவ்வப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.ஏ.சியே சொல்லியிருக்கிறார்.. அது உண்மைதான் என்பது படம் பார்க்கும்போது நன்றாகவே தெரிகிறது.