ஜூன்-22ல் டிக் டிக் டிக் ரிலீஸ்

tik tik tik release

மிருதன் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் வரும் படம் `டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹிதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்தப்படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாகவேண்டியது.. அதன்பின் மார்சசிற்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.. அந்தசமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்ததால் மீண்டும் இதன் ரிலீஸ் தள்ளிப்போனது.. தற்போது ஒரு வழியாக வரும் ஜூன்-22ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.