தள்ளிப்போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ்..?

மிருதன் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் வரும் படம் `டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை ஜன-26ஆம் தேதியன்று ரிலீஸ் செய்வதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தும் விட்டார்கள். ஆனால் தற்போது சில காரணங்களால் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போகலாம் என சொல்லப்படுகிறது.