தொடரிக்கு ‘U’ சான்றிதழ் ; செப்-22ல் ரிலீஸ்..!

thodari-movie-stills-15
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தொடரி’. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது. முதலில் ஜூலை மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், ‘கபாலி’ வெளியீட்டால் அதை மாற்றி வைத்தார்கள்..

தவிர படத்தின் பணிகள் வேறு முடிவடையாமல் இருந்தன.. தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டு காட்டினர்.. படத்தை பார்த்த அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளனர். வரும் செப்-22ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.