பொங்கலுக்கு வருகிறது ‘தானா சேர்ந்த கூட்டம்’..!

சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.. தற்போது இந்தப்படம் வரும் பொங்கல் பண்டிகை தினத்தில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த முறை சூர்யா தனது சிங்கம்-3 படத்தை பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சில பிரச்சனைகளால் பிப்ரவரி மாதம் ரிலீசானது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தமுறை சூர்யா பொங்கல் ரிலீசை மிஸ் பண்ணுவதாக இல்லை என்பது தற்போது உறுதியாகி உள்ளது.