‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தமிழகத்தில் வெளியிடும் பரதன் பிலிம்ஸ்..!

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ இயக்குனர் விக்னேஷ் சிவன் டைரக்சனில் சூர்யா நடித்துள்ள படம் என்பதால் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு படத்தின் துவக்கநிலையில் இருந்தே அதிகமாகி உள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரும் பொங்கல் வெளியீடாக ஜன-12ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப்படத்தை தமிழகம் முழுதும் பரதன் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Attachments area