அறிமுக நடிகரை ‘ஜீனியஸ்’ ஆக்கும் சுசீந்திரனின் முயற்சி பலன் தருமா..?

விஷால்,கார்த்தி, விஷ்ணு விஷால் என பெரிய நடிகர்களின் படங்களை இயங்கிவந்த சுசீந்திரன் தடாலடியாக ரோஷன் என்கிற புதுமுகத்தை வைத்து ‘ஜீனியஸ்’ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார். பிஸினஸ்மேனாக இருந்தவரை ஹீரோவாக மாற்றிய காரணம் என்ன, இந்த முயற்சி எந்த அளவுக்கு ஆலன் தரும் என்கிற நமது சந்தேகத்திற்கெல்லாம் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தில் அதில் பதில் தந்தார் சுசீந்திரன்.

“நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. நான் இந்த கதையையும் , கதாபாத்திரத்தை பற்றியும் பலரிடம் ஒன் லைனாக கூறியுள்ளேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன்.

அது கதையாக மாறிய பின்பு ஜீனியஸ் கதையை விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்த கதையை கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது.

இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். எனக்கு ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பி.கே திரைப்படம் மிகவும் பிடிக்கும். அந்த படத்தின் பாதிப்பில் தான் நான் இப்படத்தை இயக்கியுள்ளேன். இப்படம் பி.கே போல மெசேஜ் சொல்லும் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும்.

இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்குவில் வெளியிட முடிவு செய்துள்ளோம். ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் , ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி” என்றார் இயக்குனர் சுசீந்திரன்.

நாயகன் ரோஷன் பேசியபோது, “சில வருடங்களுக்கு முன்னால் நான் முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்து எதுவும் சரியாமல் நடக்காமல் போனதால் சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்து சொந்த தொழிலை பார்க்க சென்றுவிட்டேன். குடும்ப வாழக்கியில் நுழைந்து இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவும் ஆன சமயத்தில் தான் “ நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கும் ஆசையை கைவிட்டுவிட்டீர்கள் ? “ என்று என் மனைவி கேட்டார். அப்போது தொடங்கிய விஷயம் தான் இன்று சுசீந்திரன் சார் இயக்கத்தில் ஜீனியஸ் திரைப்படத்தில் நடித்துள்ளேன். ஜீனியஸ் போன்ற நல்ல படைப்பின் மூலமாக என்னை சினிமாவுக்கும் , மக்களுக்கும் அறிமுகம் செய்த இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி” என்றார்