சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் களைகட்டபோகும் 2018 தீபாவளி..!

surya 36

சூர்யா தற்போது நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் வரும் பொங்கல் ரிலீஸ் என்பதால், படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்..

இந்தநிலையில் சூர்யா ரசிகர்கர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் ஆக, சூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர். ஆம்.. சூர்யாவின் 36வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். ஜனவரியில் இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டு 2018 தீபாவளி ரிலீசாக வெளியாக இருக்கிறது என்பதையும் முன்கூட்டியே அறிவித்து ஆச்சர்யத்தை இன்னும் இருமடங்காகி உள்ளனர்.

ஆக அடுத்தவருடம் பொங்கல்-தீபாவளி இரண்டு சூர்யாவின் வசம் தான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.