மும்பையில் பூஜையுடன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பம்

‘பேட்ட’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. ‘தர்பார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். மேலும், 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக ரஜினியுடன் இணைந்து நயன்தாரா சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மும்பையில் பூஜையுடன் நேற்று படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.