பிரபுதேவா இயக்கும் தமிழ் படத்திற்கு கதை எழுதிய சுபாஷ்.!

subhash-director-prabudeva

‘சத்ரியன்’, ‘கலியுகம்’, நேசம்’ உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சுபாஷ் நேற்று காலமானார். சுபாஷ் குறித்து பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்துவருகிரார்கள்.. இந்தவகையில் இயக்குனர் பிரபுதேவாவும் சுபாஷுடனான தனது நட்பை பகிர்ந்துள்ளார்.

சுபாஷ், மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலத்தில், பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் அந்தப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர். அப்போதிருந்தே சுபாஷை பிரபுதேவாவுக்கு நன்கு தெரியும்.. தவிர பிரபு தேவாவை வைத்து, நினைவிருக்கும் வரை மற்றும் ஏழையின் சிரிப்பில் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார் சுபாஷ்.

பாலிவுட் படங்களின் கதாசிரியராக மாறி, சுபாஷ் மும்பையில் இருந்தபோது பிரபுதேவா அவ்வப்போது சுபாஷை சந்திப்பது வழக்கமாம். அப்படி ஒருமுறை சந்தித்தபோது, ‘நீ எப்படிப்பா இவ்ளோ பெரிய டைரக்டர் ஆனாய்” என கிண்டலடித்தாராம்.. அதுமட்டுமல்ல, பிரபுதேவா, அடுத்ததாக தமிழில் இயக்கவுள்ள படத்திற்கு கதை எழுதியவரும் சுபாஷ் தானாம். சுபாஷ் எழுதிய கதை என்பதாலேயே இந்தப்படத்தை தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டதாம்.