மகள் திருமணம் : தமிழக வி.ஐபிகளை நேரில் அழைத்த சிவராஜ்குமார்..!

கன்னட முன்னணி ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். கன்னட சூப்பர்ஸ்டாராக கோலோச்சிய மறைந்த நடிகர் ராஜ்குமாரின் வாரிசுகளில் ஒருவர். 51வயதான இவர் தனது மூத்த மகள் திருமணத்தை விரைவில் நடத்த உள்ளார். இதற்காக தமிழகத்தில் உள்ள சினிமா மற்றும் அரசியல் வி.ஐ.பிகளை தனது மனைவியுடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைத்துள்ளார் சிவராஜ்குமார்.

தனது தந்தையின் நெருங்கிய நண்பரான சூப்பர்ஸ்டார் ரஜினி, மற்றும் தான் இவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிடமாட்டோமா என ஏங்கிக்கொண்டிருக்கும் கமல், தன்னுடன் நட்புக்காக ஒரு படத்தில் இணைந்து ஆடிய சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் தந்தார். தனது தந்தை காலத்தில் இருந்தே குடும்ப உறவு பாராட்டி வரும் சிவாஜி இல்லத்திற்கு சென்று பிரபு, ராம்குமார் சகோதரர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் சிவராஜ்குமார்.