விக்னேஷ் சிவன் டைரக்சனில் சிவகார்த்திகேயன்..!

தற்போது சிவகார்த்திகேயன், பொன்.ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் டைரக்சனில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து இப்படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறது. ஏற்கெனவே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்து தருவதாக சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருந்தார். அது விக்னேஷ் சிவன் படத்தின் மூலமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.