சாந்தனுவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா ‘வாய்மை’..?

Shanthanu's next Vaaimai

கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடித்திருக்கும் படம் என்கிற ஒரு விஷயம் மட்டுமே போதும் ‘வாய்மை’ படத்தின் பப்ப்ளிசிட்டிக்கும், ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுத்து வருவதற்கும்.. அதை சரியாக பயன்படுத்தி இருக்கும் இயக்குனர் செந்தில்குமார் ‘வாய்மை’ படத்தை முடித்து விரைவில் படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார். இது குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வாய்மை படக்குழுவினர் படம் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொண்டனர்.

”இங்கே எல்லோருக்கும் இலவசமாக, அரிசி, டிவி, மிக்ஸி கிடைக்கிறது.. ஆனால் எல்லோருக்கும் இலவசமாக நீதி கிடைக்கிறதா” என்கிற சாட்டையடி கேள்வியை படத்தில் முன்வைத்திருக்கிறார்களாம். இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அனைவருமே படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சாந்தனுவுக்கு இந்தப்படம் மிக முக்கியமான திருப்பு முனையாக இருக்கும் என்பதை தவறாமல் குறிப்பிட்டார்கள்.