சாந்தனு நடிக்கும் ராவண கோட்டம்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் சமீபகாலமாக பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.. நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவும் இந்த பட்டியலில் அடங்குவார். சில படங்களில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அந்த படங்கள் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை.

இந்த நிலையில் எட்டுத்திக்கும் மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் அடுத்ததாக இயக்க உள்ள ராவண கோட்டம் என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சாந்தனு. முற்றிலும் புதிய கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார். இதற்கான துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது.