சீனு ராமசாமி படம் மூலம் மீண்டும் தேசிய விருது பெற்ற வைரமுத்து..!

vairamuthu-at-dharmadurai

அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் தமிழ் சினிமாவுக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.. அதில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படத்தில் ‘எந்தப்பக்கம்’ என்கிற பாடலை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது..

இது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ள 7வது தேசிய விருதாகும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த சில வருடங்களுக்கு முன் இயக்குனர் சீனுராமசாமி இதே விஜய்சேதுபதியை வைத்து இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் “கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்கிற பாடலுக்காகவும் வைரமுத்து தேசிய விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த விருது தனக்கு கிடைத்துள்ளது பற்றி வைரமுத்து கூறுகையில், “அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் பாடல்களை பொறுத்தவரையில் தமிழ் தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது. பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே” என முத்தாய்ப்பாக கூறியுள்ளார்..