‘சீமராஜா’ சிவகார்த்திகேயன் விநாயகர் சதுர்த்திக்கு வர்றார்..!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் – இயக்குனர் பொன்ராம் கூட்டணி தற்போது மூன்றாவது வெற்றிக்காக பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.

இத்தனை நாட்களாக பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடந்துவரும் இப்படத்திற்கு, இன்று சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு, ‘சீமராஜா’ என்கிற தலைப்பு பர்ஸ்ட்லுக்குடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.. இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 12வது படமாகும்.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், சூரி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இந்தப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்து வருகிறார்.

இந்தப்படம் வரும் செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகிறது என்பதையும் இப்போதே அறிவித்துவிட்டார்கள்.