பிரபு சாலமனையும் தனுஷையும் இணைத்த சத்யஜோதி….!

 

கடந்த மூன்றுமுறையும் புதுமுகங்களை வைத்தே படங்களை இயக்கி மூன்றையும் வெற்றிப்படங்களாக்கியவர் இயக்குனர் பிரபுசாலமன்.. ஸ்டார் வேல்யூ இல்லாமல் தன் கதைகள் மீது கொண்ட நம்பிக்கையின் மூலம் இந்த வெற்றிகளை சாத்தியமாக்கிய பிரபு சாலமன் இப்போது அடுத்த படத்தில் ஸ்டார் நடிகரான தனுஷுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.. இந்தப்படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைப்பெற்று வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் வெற்றிகரமான இசைக்கூட்டணியான பிரபுசாலமன் – டி.இமான் மீண்டும் இணைந்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் இந்தப்படத்தை தயாரிக்கிறார். மூன்றாம் பறை,  கிழக்குவாசல்,  இதயம்,  பார்த்திபன் கனவு, எம் மகன் என அனைவராலும் பாராட்டப்பட்டு மத்திய மாநில விருதுகளை அள்ளிய படங்களை தயாரித்த நிறுவனம் தான் சத்ய ஜோதி பிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது…