விஜய்-மணிரத்னம் முன்னிலையில் நடைபெற்ற சாந்தனு-கீர்த்தி திருமணம்..!

பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியினரின் செல்லமான வாரிசு சாந்தனு, ‘வேட்டிய மடிச்சு கட்டு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘சக்கரக்கட்டி’ படத்தின் மூலம் கதாநாயகனாக மாறி இளம் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து ‘கண்டேன்’, ‘சித்து பிளஸ்டூ’, ‘அம்மாவின் கைபேசி’ ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது ‘வாய்மை’, ‘அமளி துமளி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும் சின்னத்திரை தொகுப்பாளினி கீர்த்திக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண வைபவத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டு மணமகன் கையில் தாலி எடுத்து கொடுக்க, அதை கீர்த்தி கழுத்தில் கட்டினார் சாந்தனு. இந்த நிகழ்ச்சியில் மணிரத்னம் தனது மனைவி சுகாசினியுடன் கலந்துகொண்டார்.

கார்த்தி, ஜோதிகா, விஷால், சூரி, விக்ராந்த், சுகன்யா, சரத்குமார், ராதிகா, குஷ்பு, இயக்குனர் ஹரி, எஸ்.பி.முத்துராமன், பிரபு மற்றும் அவரது மனைவி புனிதா, ஏ.வி.எம்.சரவணன், மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டு மனமக்கள வாழ்த்தினர்.

பாக்யராஜின் ஆரம்பகாலப்படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து வெற்றிகண்ட வெங்கடேஷ், பாக்யராஜுடன் கொண்ட ஆழமான நட்பின் காரணமாக மணமக்களை நேரடியாக வந்து வாழ்த்தினார். குருவின் வீட்டு திருமணம் என்பதால் வந்தவர்களை வரவேற்கும் வேலைகளை சிஷ்யர்களான பார்த்திபனும் பாண்டியராஜனும் கவனித்தனர்.