தெலுங்கு ‘நெப்போலியன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ஆர்.கே.சுரேஷ்..!

RK Suresh in Napoleon remake

தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் தயாரித்த வெற்றிப்படமான ‘தர்ம துரை’ படத்திற்குப் பிறகு வித்தியாசமான நல்லதொரு கதைக்குக் காத்திருந்த ஆர்.கே.சுரேஷுக்கு கடந்த மாதம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற நெப்போலியன் படத்தின் கதை மிகவும் பிடித்துப்போகவே அதன் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி விட்டார்.

இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க மிக முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். தவிர பாலிவுட்டிலிருந்து பெரிய நட்சத்திர நடிகர் ஒருவரும் இதில் நடிக்க வருகிறார். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இந்த ‘நெப்போலியன் ‘படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.