‘றெக்க’ படத்துக்கு பூஜை போட்டாச்சு..!

rekka pooja

விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கவுள்ள படம் ‘றெக்க’… ‘வா டீல்’ பட இயக்குனர் இரத்தின சிவா இயக்கும் இந்தப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்று, அத்துடன் படப்பிடிப்பும் துவங்கியது.. இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் லட்சுமி மேனன். டி.இமான் இசையமைக்கும். இந்தப்படத்தை காமன்மேன் தயாரிக்கிறார்.

ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள ‘இறைவி’ படம் இந்த மாதம் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.. அதுமட்டுமல்லாமல் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘தர்மதுரை’ படத்தின் இசைவெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.