ரசிகர்கள் மனதில் ‘ரீங்காரம்’ இடும் பிரியங்கா..!

“வாழ்க்கை நாம தயாரிக்கிற அட்டவணைக்குள்ள எப்பவுமே அடங்கறதில்ல… அது போடுற அட்டவணைக்குள்ளதான் நம்மள அடக்கும். அது கூட்டிப் போற திசையை யாராலும் யூகிக்க முடியாது” என் புதிர்போடும் கதையுடன் ‘ரீங்காரம்’ படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் சிவகார்த்திக்.

சமுத்திரக்கனியின் சீடரான இவர் இந்தப்படத்தை 26 நாட்களிலேயே அடுத்து முடித்துள்ளார்.. இந்தப்படத்தில் புதுமுகம் பாலா கதாநாயகனாக நடிக்க, கங்காரு, வந்தா மல படங்களில் நடித்து அதிர்வலைகளை ஏற்படுத்திய ஸ்ரீ பிரியங்கா கதாநாயகியாக நடித்துள்ளார்.

கதாநாயகன் பாலாவுக்கு 6 மாதம் நடிப்பு பயிற்சி கொடுத்தோம்.. காரணம் படம் முழுவதுமே வசன மொழி குறைவு, உடல் மொழி அதிகம், லெக்கின்ஸ் காலத்தில் கவர்ச்சியே இல்லாம படம் செய்வது மிகப்பெரிய சவால். ஆனால் நாங்க சென்சாருக்கு வேலையே இல்லாமல் அப்படியொரு படம் பண்ணிருக்கோம்ங்கிறது மிகப்பெரிய சந்தோஷம்” என்கிறார் சிவகார்த்திக்.