2-ஆம் இடத்தை பிடித்த ராட்சசன்

ratsasan 2nd place

வணிக ரீதியிலான பொழுதுபோக்கு படங்களின் மத்தியில், ஒரு சில த்ரில்லர் சினிமாக்கள் மக்களிடையே மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கும். அந்த வகையிலான ஒரு திரைப்படம் தான் ராட்சசன், அதன் வித்தியாசமான கதையமைப்பால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, திகில் படங்களின் வரிசையில் ஒரு கல்ட் சினிமாவாக மாறியிருக்கிறது. வணிக ரீதியாக அதிக வசூல் செய்த படம் என்று நிரூபணம் செய்யப்பட்ட இந்த படம், தமிழ் சினிமாவிற்கு பெரும் அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது.

ராட்சசன் படத்தின் பெருமைகளுக்கு மகுடம் சூட்டுவது போல, தற்போது இந்த படம் IMDB தரவரிசையில் இந்தியாவின் சிறந்த படங்களின் வரிசையில் இரண்டாவது மிகச்சிறந்த படமாக மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்படங்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவுக்கே புத்துணர்ச்சி அளித்திருக்கிறது.

ராட்சசன் IMDB தர வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. தென்னியந்திய சினிமாக்களில் ராம்சரணின் ரங்கஸ்தலம், விஜய்சேதுபதியின் 96 மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி ஆகிய படங்களும் சிறந்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், கிறிஸ்டோபர் சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர். ராம்குமார் இயக்க, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்திருந்தார்.