ராட்சசன் ஆங்கில ரீமேக் ; ஜிப்ரான் புது தகவல்

jibran

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் வெளியான ‘ராட்சசன்’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்தப்படத்திற்கு இசையமைத்ததோடு ஒரு கெஸ்ட் ரோலில் நடிகராகவும் தலைகாட்டி இருந்தார் இசையமைப்ளர் ஜிப்ரான். அந்த அனுபவம் பற்றி அவர் கூறும்போது, “இந்த படத்தில் அவர்களுக்கு ஒரு ஸ்டுடியோ தேவைப்பட்டது. என் ஸ்டுடியோவில் எல்லாம் தயாரான பிறகு, இயக்குனர் நீங்களே நடிச்சிருங்க என வற்புறுத்தியதால் தான் ஒரு காட்சியில் நடித்தேன். கிரைம், திரில்லர் படங்களையே தொடர்ந்து பண்றேன் என சொல்கிறார்கள். கதையே இல்லாத ஒரு கமெர்சியல் படமாக இருந்தாலும் செய்ய நான் ரெடி தான்.” என்றார்.

அப்படியே ஒரு புது தகவலாக “இரு நாட்களுக்கு முன்பு உத்தமவில்லன் படம் மிக்ஸிங் செய்த இடத்தில் இருந்து என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். இந்த படத்தின் ஆங்கில ரீமேக் உரிமையை கேட்டார்கள். அப்படி ஆங்கிலத்தில் இந்த படத்தை எடுத்தால் அதற்கு நான் இசையமைக்க ஆசைப்படுகிறேன்” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.