சென்னை திரும்பினார் ரஜினி..!

rajini returns 1

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஏப்-23ஆம் தேதி உடல் பரிசோதனைக்காக 10 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷும் புறப்பட்டு சென்றார்.. உடல் பரிசோதனைக்காக செல்வதாக கூறப்பட்டாலும், சமீபத்தில் கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கான ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பயணத்தில் அவர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் சொல்லப்பட்டது.

இந்தநிலையில் நேற்று இரவு ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பினார். வீடு திரும்பிய ரஜினியை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார். வரும் மே-9ஆம் தேதி நடைபெற உள்ள ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் விதமாக அவரது இந்த பயண திட்டம் திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.. .