ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணம் ; ரஜினி நேரில் வாழ்த்து..!

yg son marriage

கடந்த 3௦ வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஒய்’ஜி.மகேந்திரன். இவரது மகன் ஹர்ஷவர்தனா – ஸ்வேதா திருமணம் இன்று (பிப்-11) காலை சென்னை நீலாங்கரையில் உள்ள ராணி மஹால், புளூ லகூன் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.

சரியாக காலை 9.50க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். இந்த திருமண நிகழ்வில் ரஜினி தனது மனைவி லதாவுடன் தம்பதி சகிதமாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.