க்ரைம் த்ரில்லர் கதைகளை வரவேற்கும் ராட்சசன் தயாரிப்பாளர்

dillibabu

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ராட்சசன். சைக்கோ த்ரில்லர் வகையை சேர்ந்த இந்தப்படத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிக்க முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கியிருந்தார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு தயாரித்திருந்தார்.

இந்தப்படத்தின் கதையை கேட்டுவிட்டு பிடித்திருந்தாலும் கூட காமெடிப்படம் இயக்கிய ஒரு இயக்குனர் இப்படி ஒரு படாததை சரியாக கொடுப்பாரா என பல தயாரிப்பாளர்கள் தயங்கினார்களாம். அனால் தயாரிப்பளார் டில்லிபாபு க்ரைம் த்ரில்லர் படங்களை தயாரிக்க விரும்புபவர். அதனால் ராம்குமார் இந்த கதையை சொன்னதும் உடனே ஓகே சொல்லி படத்தை தயாரித்தார்.

இப்போது படம் வெற்றிபெற்றுள்ள நிலையில் இதுபோன்றா வித்தியாசமான கதைக்களத்தில் க்ரைம் த்ரில்லர் கதைகளுடன் வருபவர்களுக்கு தனது ஆக்சஸ் பேக்டரி நிறுவனத்தின் வாசல் திறந்தே இருக்கும் என உற்சாகமாக அறிவித்துள்ளார்.