ட்ராபிக் ராமசாமியுடன் கைகோர்த்த பிரகாஷ்ராஜ்..!

prakashraj

வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி ‘டிராபிக் ராமசாமி’ என்கிற பெயரிலேயே ஒரு படம் எடுக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் விஜய் விக்ரம் இயக்கும் இந்தப்படத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார் .

இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியவரும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெளரவதோற்றத்தில் பங்குபெறுகிறார்கள்.

இப்போது ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த அதிரடியான போலீஸ் கமிஷனராக நடிக்கிறார் என்கிற ஆச்சர்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதைப் பற்றிப் பிரகாஷ்ராஜ் கூறும்போது “வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நான் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்.” என்று குறிப்பிட்டார்.