‘பேட்ட’ ரஜினி – 165 டைட்டில் அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துவரும் படத்திற்கு ‘பேட்ட’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 165 படமான இந்தப்படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது..

அதை பூர்த்தி செய்யும் விதமாக கலக்கலான டைட்டிலுடன்சேர்த்து ரஜினியின் கெட்டப்புடன் கொடிய மோஷன் போஸ்டரை வெளியிட்டு அதிரவைத்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.