இனிமேல் இப்படித்தான் ; சூசகமாக டைட்டிலை வெளியிட்ட வெங்கட்பிரபு..!

party

சமீபத்தில் நடைபெற்ற ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் பட இசை வெளியீட்டு விழாவில் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்துவிட்டார் இயக்குனர் வெங்கட்பிரபு.. படத்தின் டைட்டில் ‘பார்ட்டி’.. என்னது ஆங்கிலத்தில் டைட்டில் வைத்திருக்கிறாரே என்று நினைக்கிறீர்களா..? இந்த டைட்டிலை வைத்ததன் மூலம் இனிமேல் இப்படித்தான் என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார் வெங்கட்பிரபு.

பொதுவாக வரிவிலக்கு கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகத்தான் பலரும் தமிழில் டைட்டில் வைத்து வந்தார்கள்.. அதில் சில படங்கள் நன்றாக இருந்தும் தமிழில் வைத்த டைட்டில் அவ்வளவாக ரசிகர்களை கவராததால் தோல்வியடைந்த நிகழ்வுகளும் உண்டு..

ஆனால் வரும் ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வர இருப்பதால் தமிழக அரசின் கேளிக்கை வரி எல்லாம் காணாமல் போய், இனி ஜி.எஸ்.டி வரிதான் கோலோச்சப்போகிறது. அந்த வரிக்கு தமிழில் டைட்டில் வைத்தாலும் சரி, ஆங்கிலத்தில் டைட்டில் வைத்தாலும் சரி ஒரேமாதிரியான வரிவிதிப்பு தான். இதனை உணர்ந்துதான் தனது படத்திற்கு பொருத்தமான தலைப்பை ஆங்கிலத்திலேயே வைத்துவிட்டார் வெங்கட்பிரபு.. சும்மாவா..? சூர்யா படத்திற்கு ‘மாஸ்’ என டைட்டில் வைத்துவிட்டு அவர் பட்ட பாட்டைத்தான் பார்த்தோமே..?

இந்த புதிய படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார்.. வெங்கட் பிரபு இயக்கிய அவரது 2வது படத்தை தயாரித்ததும் இதே சிவாதான். இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவுக்கு பதிலாக இசையமைக்கிறார் பிரேம்ஜி அமரன்.. அதேசமயம் இந்தப்படத்தில் பிரேம்ஜி நடிக்கவில்லை என்பது இன்னொரு தகவல்..