“சுசீந்திரன் என்னை ஏமாற்றிவிட்டார்” – ‘பாயும் புலி’ சிங்கிள் ட்ராக் ரிலீஸ் கலாட்டா..!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாயும் புலி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்ட நிகழ்வில் நமக்கு கிடைத்த சிங்கிள் தகவல்கள்…

விஷாலும் சுசீந்திரனும் இணையும் இரண்டாவது படம்.. சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையமைக்கும் மூன்றாவது படம். வேந்தர் மூவிசும் விஷாலும் இணையும் நான்காவது படம்.

ஐந்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். இதில் வெளியிடப்பட்டது ‘சிலுக்கு மரமே’’ என்கிற பாடல்.. ஆனால் விஷாலுக்கு பிடித்ததோ ‘யாரந்த முயல்குட்டி’ என்கிற பாடல் தானாம்.

படப்பிடிப்பின் போது விஷால் வீட்டிலிருந்து தினசரி சூரிக்கும் சேர்த்து சாப்பாடு அனுப்பி வைக்கும் அளவுக்கு விஷாலும் சூரியும் ரொம்பவே ‘திக் பிரண்ட்ஸ்’ ஆகிவிட்டார்களாம்.

லிங்குசாமி பேசும்போது ‘பாயும் புலி’ என்று சொல்லும்போதே ‘பாகுபலி’ என சொல்வதுபோல வைப்ரேஷன் உண்டாகிறது.. அதைப்போல இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிபெறும் என்றார்.

கம்போடியோவுக்கு ஷூட்டிங் போகப்போறோம் என சொன்ன சுசீந்திரன் காரைக்குடியிலே படப்பிடிப்பை முடித்து ஏமாற்றிவிட்டார் என குறைப்பட்டுக்கொண்டார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

‘நான் மகான் அல்ல’ படத்துக்கு பிறகு சுசீந்திரன் மனதுக்கு நெருக்கமான படம் ‘பாயும் புலி’ தானாம்.

ஆகஸ்ட்-2ல் இசைவெளியீட்டை நடத்தி, செப்டம்பர்-4ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது வேந்தர் மூவிஸ்.