‘போகன்’ படத்திற்காக 14 பேர் மீண்டும் அமைத்த மெகா கூட்டணி..!

bogan
ஒரு வெற்றிப்படத்தில் வேலை பார்த்த மூன்று அல்லது நான்கு, மிஞ்சிப்போனால் ஐந்து பேர் அடுத்த படத்திலும் கூட்டணி சேர்வதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால் ஜெயம் ரவி நடிக்கும் ‘போகன்’ படத்திற்காக முதன்முறையாக 14 பேர் மீண்டும் அமைத்த மெகா கூட்டணி அமைத்த வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது..

ஆம்.. வருடம் வசூலில் அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் நாயகன் ஜெயம்ரவி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், எடிட்டர் ஆண்டனி, மாஸ்டர் திலீப்சுப்பராயன், வசனகர்த்தா சந்துரு, பாடலாசிரியர்கள் மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ் ஆகியோர் போகன் படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

இதில் இன்னொரு ஸ்பெஷலாக தனி ஒருவன் படத்தின் சூப்பர் ஹிட் கூட்டணியான ஜெயம்ரவி – அரவிந்த்ஸ்வாமி கூட்டணியும் கூடுதல் பலம் சேர்க்கிறது போகனுக்கு. அப்படிப்பார்த்தால் 15 பே கூட்டணி என்றுகூட சொல்லலாம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் பெரம்பூர் பின்னிமில்லில் துவங்குகிறது.

எப்படி ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஜெயம் ரவிக்கு சூப்பர் ஹிட் பாடலாக ‘டண்டணக்கா’ பாடல் அமைந்ததோ, அதேபோல ‘போகன்’ படத்தில் ‘டமால் டுமீல்’ என்ற பாடல் சூப்பர்ஹிட்டாகும் என சொல்லபடுகிறது. இந்த பாடல் காட்சியுடன் தான் நாளை மறுநாள் படப்பிடிப்பும் துவங்குகிறது. பிரபுதேவா இந்தப்படத்தை தயாரிக்கிறார்.