விஜய்சேதுபதி படத்தில் நிவேதா பெத்துராஜ்

Nivetha-Pethuraj

டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் நிவேதா பெத்துராஜ்.. வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘பார்ட்டி’ என்கிற படத்திலும் நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான டீசரிலேயே பரபரப்பை கிளப்பிய பொன்மாணிக்கவேல் படத்திலும் பிரபுதேவாவின் ஜோடியாக நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ். இதையடுத்து விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.