இயக்குனர் திரு-ஜெய் கூட்டணியை உருவாக்கிய வருண்மணியன்..!

 

விஷாலை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியவர் இயக்குனர் திரு.. மூன்று படங்களும் ஆஹா, ஓஹோ என ஓடவில்லையென்றாலும் இந்த ஆளிடம் ஏதோ விஷயம் இருக்குய்யா என சொல்லும் விதமாக ஒவ்வொரு படத்திலும் மேக்கிங் ஸ்டைலில் வித்தியாசம் காட்டியிருப்பார் திரு..

இப்போது ஜெய்யை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் திரு. இந்தப்படத்தை த்ரிஷாவின் வருங்கால கணவரான வருண்மணியன் தான் இன்னும் இரண்டு தயாரிப்பாளர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இசைக்கு தமன், ஒளிப்பதிவுக்கு ரிச்சர்டு எம் நாதன், எடிட்டிங்கிற்கு ரூபன் என ஹைடெக் டெக்னீசியன்கள் இந்தப்படத்தில் பணியாற்றுகின்றனர். மார்ச்சில் படப்பிடிப்பை துவங்கவிருக்கும் இந்தப்படத்திற்கு கதாநாயகி தேர்வு நடைபெறுகிறது