ஜெயம் ரவி படத்தை இயக்குகிறார் ‘நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குனர்..!

திறமையிருந்தாலும் கூட அதிர்ஷ்டமும் நேரமும் கூடிவரவேண்டும் என சும்மாவா சொன்னார்கள்..? அதை நிரூபிக்கும் விதமாக ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் மூலம் ஜாக்கிரதையாக ஒரு படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். குழந்தைகளை கவரும் படம் வெற்றிபெற தவறியதில்லை என்பதையும் நிரூபித்தார்.

இதையடுத்து தனது அடுத்த படத்தில் ஜெயம் ரவியை இயக்கவுள்ளார் சக்தி சௌந்தர்ராஜன். படம் வெளியாகி மூன்று மாதங்கள் கழித்து, கடந்த பிப்ரவரி-1ஆம் தேதி ‘நாய்கள் ஜாக்கிரதை’ மிகவும் வித்தியாசமான படம் என ஜெயம் ரவி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அப்போதே சியா யூகங்களை கிளப்பிய இந்த கூட்டணி இப்போது உறுதியாகியுள்ளது. இந்தப்படத்தை மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரிகிறது. தகவல் அறிந்த வெங்கட்பிரபுவும், சிபிராஜும் தங்களது வாழ்த்தை சக்திக்கு தெரிவித்துள்ளனர். இந்தப்படம் முற்றிலும் மாறுபட்ட கதையமைப்பில் இருக்குமாம்.