முண்டாசுப்பட்டி 2ஆம் பாகத்துக்கு ஐடியா கொடுத்தா துட்டு…!

சின்ன பட்ஜெட்டுல தயாராகி இன்னைக்கு 25வது நாளா வெற்றிகரமா ஓடிக்கிட்டு இருக்கு ‘முண்டாசுப்பட்டி’. ராம்குமார் இயக்கி விஷ்ணு, நந்திதா நடிப்புல சி.வி.குமார் தயாரிச்ச இந்தப்படம் இன்னைக்கு தேதி வரைக்கும் பத்து கோடி ரூபாய்க்கு மேல வசூல் பண்ணியிருக்காம்.

அதனால் இப்ப இந்தப்படத்தோட இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு பனணியிருக்கிறார் சி.வி.குமார். இந்த இரண்டாம் பாகம் எப்படி இருக்கலாம், காட்சிகள் எப்படி இருக்கலாம்னு யார் வேண்டும்னாலும் ஐடியா கொடுக்கலாம்.

படம் ஆரம்பிக்கப்படும்போது யாருடைய ஐடியா ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அவர்களுக்கு பணமுடிப்பு வழங்கி கௌரவிக்க இருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார். அனேகமாக இந்த இரண்டாம் பாகம் அடுத்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் என தெரிகிறது.