மாயவன்-கதாநாயகன் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு..!

mayavan - kathanayagan

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது, திறமையான இயக்குனர்களை, நடிகர்களை அறிமுகப்படுத்துவது ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம்வந்த சி.வி.குமார் தற்போது ‘மாயவன்’ படம் மூலம் இயக்குனராகவும் மாறிவிட்டார்.. இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் மாநகரம் புகழ் சந்தீப். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் சந்தீப்..

அவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். தனது ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனில் இருந்து இந்தமுறை ஜிப்ரானுக்கு மாறியுள்ளார் சி.வி.குமார்.. படத்தின் எடிட்டர் வழக்கம் போல லியோ ஜான்பால் தான். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படம் வரும் செப்-1ஆம் தேதி ரிலீசாகிறது.

அதேபோல வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால், தனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரித்து நடித்து வரும் படம் ‘கதாநாயகன்’ முருகானந்தம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கேத்தரின் தெரசா கதாநாயகியாக நடித்துள்ளார். படமும் வரும் செப்-8ஆம் தேதி ரிலீஸாகிறது.